
இன்று தளபதி விஜயின் 44வது பிறந்தநாள். விஜய் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான நாளான இன்றைய தினத்தை, அவர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஒரு நடிகராக மட்டுமின்றி நல்ல மனிதராக விஜயின் குணங்களை ரசிக்கின்றனர் அவரது ரசிகர்கள். அதற்கு தகுந்தாற் போல இருக்கின்றது அவரது நடவடிக்கைகளும்.
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தளபதி 62 படத்திற்கான பெயர் ”சர்கார்” நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சர்கார் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கும் வெளியாகி, விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி இருக்கிறது.
தளபதி விஜயின் பிறந்த தினமான இன்று அவருக்கு அவரது ரசிகர்கள், மற்றும் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் போன்றோர், சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அவரின் பிறந்தநாளை டிவிட்டரில் சிறப்பாக்கும் விதமாக உருவாக்கப்பட்ட #HBDThalapathyVIJAY ஸ்பெஷல் ஹேஷ் டேக், தற்போது ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. மிகப்பெரிய எண்ணிக்கையிலான ட்வீட் மற்றும் ரீட்வீட்டுகளை பெற்று இந்த டேக் சாதனை செய்து இருக்கிறது. இந்த ட்வீட்டுகளின் எண்ணிக்கை 1 மில்லியனை இப்போது நெருங்கி கொண்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.