BiggBoss 5 Tamil: சஞ்சீவ் அக்கா சிந்து இறந்தது எப்படி? பிக்பாஸ் வீட்டில் கண்ணீர்விட்டு கதறிய பிரபலம்!

Published : Dec 22, 2021, 08:48 PM IST
BiggBoss 5 Tamil: சஞ்சீவ் அக்கா சிந்து இறந்தது எப்படி? பிக்பாஸ் வீட்டில் கண்ணீர்விட்டு கதறிய பிரபலம்!

சுருக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் (Biggboss 5) வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைத்துள்ளவர், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும், பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சீவ் தன்னுடைய அக்கா மரணம் குறித்து பேசி கதறி அழுதது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.  

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைத்துள்ளவர், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும், பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சீவ் தன்னுடைய அக்கா மரணம் குறித்து பேசி கதறி அழுதது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இவர் 50 நாட்களை கடந்த பிறகு பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார், எனினும் இவர் நடந்து கொள்ளும் விதம் பிக்பாஸ் ரசிகர்களை கவர்த்துள்ளதால், தொடர்ந்து இவருக்கு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகிறார்கள். மேலும் ரசிகர்கள் சஞ்சீவ் பற்றியும், அவரது மனைவி, குழந்தைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 மேலும் நேற்றைய தினம் சஞ்சீவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அவரைப் பற்றியும், அவர் கடந்து வந்த பாதைகள், அவரை அதிகம் பாதித்த விஷயங்கள் குறித்தும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். அப்போது சஞ்சீவ் தன்னை பற்றி கூறுகையில், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி அழுதது பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டும் இன்றி, பார்ப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக சஞ்சீவ் தன்னுடைய அக்கா சிந்துவின் மரணம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

சஞ்சீவ் மஞ்சுளா விஜயகுமாரின், சகோதரி ஷியாமளாவின் மகன் என்பதாலும் மஞ்சுளா மற்றும் விஜயகுமார் இருவரும் நடிகர்கள் என்பதாலும், இளம் பருவத்திலிருந்தே நடிகராகும் ஆசை அவருக்குள் இருந்தது என்றும், எனவே தான் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை தேர்வு செய்து பிடித்ததாகவும் கூறினார். லயோலா கல்லூரியில் படிக்கும் போது தான், சஞ்சீவிற்கு நடிகர் விஜய் நண்பரானார் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சஞ்சீவ் படித்து கொண்டிருந்த சமயத்தில், அவரது அக்கா சிந்துவுக்கு படவாய்ப்புகள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்த 'இணைந்த கைகள்' படத்தின் மூலம் அறிமுகமானார் சிந்து. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பு திறமையை நிரூபித்தார். பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

இவருடைய திருமண வாழ்க்கை, விவாகரத்தில் முடிந்தது, எனவே தன்னுடைய மகளுடன் சிந்து பெற்றோருடன் தான் வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் தான் சிந்துவின் அந்த எதிர்பாராத மரணமும் நடந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை சீற்றத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கான சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நிதி திரட்டிக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, சிந்துவும் சென்றிருந்தார். சஞ்சீவும் அதே கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீர் என சிந்துவுக்கு எப்போதும் ஏற்படுவது போல் வீசிங் பிரச்சனை வந்தது.

உடனடியாக அவர் எப்போதும் எடுத்து கொள்ளும் ஸ்பிரே மருந்து எடுத்து கொண்ட பின்பும், திடீர் என மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் மரணத்திற்கு பின்னர் ஒட்டு மொத்த குடும்பத்தின் பாரத்தையும் நான் தான் ஏற்க வேண்டும் என்கிற சூழல் உருவானது என்று கதறி அழுதார். அதே போல், தன்னுடைய அக்கா இறந்த போது.. அவருடைய மகளை நன்றாக பார்த்து கொள்ளவேண்டும் என அதே போல் அவரை நன்றாக படிக்க வைத்து, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து திருமணமும் செய்து கொடுத்ததாக தெரிவித்தார். சஞ்சீவ் தன்னுடைய அக்கா இழப்பு குறித்து கூறியது பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் கைது.. போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதால் நடவடிக்கை..!
சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?