’நாயை வச்சுக்கூட படம் எடுக்கலாம்...ஆனா அந்த ஹீரோவை வச்சு எடுக்கக்கூடாது’..பாதிக்கப்பட்டவரே சொல்றாருங்க...

By Muthurama LingamFirst Published Jul 4, 2019, 12:59 PM IST
Highlights

இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ”மாநகரம்” பட புகழ் சந்தீப் கிஷன் நடித்திருக்கும் படம் ”கண்ணாடி”. ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில், புதுமுக அனன்யா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தீப் கிஷன் சினிமாவில் தன்னைத் துரதிர்ஷ்டம் தொடர்ந்து துரத்திவருவதாகக் குறிப்பிட்டார்.

இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ”மாநகரம்” பட புகழ் சந்தீப் கிஷன் நடித்திருக்கும் படம் ”கண்ணாடி”. ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில், புதுமுக அனன்யா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தீப் கிஷன் சினிமாவில் தன்னைத் துரதிர்ஷ்டம் தொடர்ந்து துரத்திவருவதாகக் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய அவர் ”கண்ணாடி” டீஸர் பார்த்த பலரும் பாஸிட்டிவான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். எனக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் என்ன தப்பு செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட்டம் வேண்டியிருக்கிறது. 

நான் நடித்த ”நரகாசூரன்” படம் இன்னும் வரவில்லை. அந்த இயக்குநர் என்ன கஷ்டப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும். இப்படத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம். ‘மாயவன்‘ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசட தபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது இது எல்லாராலும் பேசும்படமாக இருக்கும். 

நான் எப்போதுமே எல்லாரும் செய்வதை செய்ய ஆசைப்படாதவன். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். நான் பேய் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன். எல்லோரும் செய்வதை செய்ய நான் தேவையில்லை. இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இன்னும் ஜெயிக்கவில்லை என்ற குறை இருக்கிறது என்றார். இவர் நடித்து தமிழில் வந்த சுமார் படம் ஒன்றை ஆந்திராவில் டப்பிங் செய்து வெளியிட்டார்களாம். அங்கே அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர், நாயை வச்சுக் கூட படம் எடுக்கலாம். சந்தீப்பை வச்சு படம் எடுக்கக்கூடாது என்று ஓப்பன் மேடையில் பேசினாராம்.

click me!