’எஸ்.எஸ்.ராஜமவுலி என் சகோதரர்’...ட்விட்டர் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியிட்ட தமிழ் நடிகர்...

Published : Apr 07, 2019, 10:59 AM IST
’எஸ்.எஸ்.ராஜமவுலி என் சகோதரர்’...ட்விட்டர் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியிட்ட தமிழ் நடிகர்...

சுருக்கம்

’ஆர் ஆர் ஆர்’ படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியுடன் எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு தனது எல்லையற்ற மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி.

’ஆர் ஆர் ஆர்’ படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியுடன் எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு தனது எல்லையற்ற மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி.

சசிக்குமாரை வைத்து ‘போராளி’ படத்தை இயக்கிய பின் முழுநேர நடிகராக மாறியிருந்த சமுத்திரக்கனி, சமீபத்தில்தான் ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கிமுடித்திருக்கிறார். இந்நிலையில் ’ஆர் ஆர் ஆர்’படத்தில் நடிக்க திடீரென இயக்குநர் ராஜமவுலியிடமிருந்து அழைப்பு வந்ததும் திக்குமுக்காடிப்போனார்.

அதுகுறித்து அப்போது பேட்டி அளித்த சமுத்திரக்கனி ’நாடோடிகள்’ ரிலீஸான சமயம் என் நடிப்பைப் பாராட்டி நீண்ட மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார் இயக்குநர் ராஜமவுலி. அதிலிருந்து அவரிடம் தொடர்ந்து டச்சில்தான் இருந்து வந்தேன். கடந்த வாரம் திடீரென்று அவரிடமிருந்து போன். வீட்டுக்கு வரச்சொன்னார். அன்பாக உபசரித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்து, முடிவில் என் படத்துல மெயின் கேரக்டர் ஒண்ணு பண்றீங்க என்று சர்ப்ரைஸ் தந்தார். மறுபேச்சின்றி ஒப்புக்கொண்டேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ராஜமவுலியுடன் நிற்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சமுத்திரக்கனி...என் சகோதரர்... இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன்....வெல்வோம்’...என்று பதிவிட்டிருக்கிறார். தெலுங்குப் படமாகத் துவங்கி இன்று அலியா பட், அஜய் தேவ்கான் என்று இந்தி ஸ்டார்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்திய சினிமாவாகியிருக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிப்பது தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக ஒரு பெருமையான விசயம்தான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாலய்யாவின் மாஸ் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டாக இருந்ததா? அகண்டா 2 விமர்சனம் இதோ
ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரஜினியின் பர்த்டே கிளிக்ஸ் இதோ