நட்சத்திர ஹோட்டலில் நடக்கவிருக்கும் குறளரசனின் திருமண ரிசப்ஷன் அழைப்பிதழ் இதோ....

By Muthurama LingamFirst Published Apr 7, 2019, 9:31 AM IST
Highlights

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனின் திருமணம் குறித்த உத்தேசமான செய்திகள் வெறும் யூகங்களின் அடிப்படையிலேயே வெளிவந்துகொண்டிருந்த நிலையில் அவரது திருமண ரிசப்ஷன் அழைப்பிதழ் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
 

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனின் திருமணம் குறித்த உத்தேசமான செய்திகள் வெறும் யூகங்களின் அடிப்படையிலேயே வெளிவந்துகொண்டிருந்த நிலையில் அவரது திருமண ரிசப்ஷன் அழைப்பிதழ் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, பாண்டிராஜ் இயக்கினார். நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். 2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அப்படமும் பாடல்களும் தோல்வியைத் தழுவியதால் அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில்,குறளரசன் ஒரு இஸ்லாமியப்பெண்ணைத் தீவிரமாகக் காதலிப்பதாகவும் அதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறவிருப்பதாகவும் செய்திகள் பரவ துவக்கத்தில் அதை மறுத்த அவர் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார்.தற்போது குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன். ஆனாலும், குறளரசன் என்ற தன்னுடைய பெயரை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

குறளரசன் மணக்கவிருக்கும் பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் - ரெஹ்மத் அஹ்மத்.இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்து வருகிறார் டி.ராஜேந்தர்.

இவர்களது திருமணம் இந்து முறைப்படியா  அல்லது இஸ்லாமிய வழக்கப்படியா என்று அறிவிக்கப்படாத நிலையில் திரையுலகத்தினருக்கு அவர்களது ரிசப்ஷனுக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.

click me!