
தளபதி விஜய் தற்போது தன்னுடைய 63 ஆவது படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களின் ஆரவாரம் காரணமாக தற்போது படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றம் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய குடும்பத்துடன் சீனாவிற்குச் சென்று ஓய்வெடுத்து திரும்பினார். ஏற்கனவே விஜய் தன்னுடைய மகனுடன் வெளிநாட்டில் நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
அதைத்தொடர்ந்து தற்போது விஜய், மனைவி சங்கீதா, மகன், ஆகியோருடன் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இது தூரமாக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் விஜய் ரசிகர்கள் விடுவார்களா என்ன? இந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்த்து வருகின்றனர்.
அந்த புகைப்படம் இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.