ஆசை பட நடிகை சுவலக்ஷ்மியா இது? வைரலாகும் கணவருடன் இருக்கும் புகைப்படம்!

Published : Apr 06, 2019, 06:30 PM IST
ஆசை பட நடிகை சுவலக்ஷ்மியா இது? வைரலாகும் கணவருடன் இருக்கும் புகைப்படம்!

சுருக்கம்

நடிகை சுவலட்சுமி கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  

நடிகை சுவலட்சுமி கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

1995 ஆம் ஆண்டு, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் ஆசை. சுவலட்சுமியின் முதல் படமே, இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்த படத்தை தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொண்ட குடும்ப பாங்கான வேடங்களை தேர்வு செய்து நடித்தார்.  விஜயுடன் 'லவ் டுடே', ' நிலாவே வா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளைகொண்டார்.

கடைசியாக 2003 ஆம் ஆண்டு 'நதி கரையினிலே' என்கிற படத்தில் நடித்தார். இதற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவரது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் சூலம் என்கிற சீரியலிலும் நடித்தார்.

படவாய்ப்புகள் குறைந்ததால் 2002 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் "Swagato Banerjee " என்பவரை திருமணம் செய்துகொண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் குடியேறினார்.  நீண்ட இடைவெளிக்குப் பின் இவரை 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மோகன் ராஜா அணுகியபோது ஒரு சில காரணங்களால் இப்பட வாய்ப்பை மறுத்துவிட்டார்.

தற்போது திரையுலகை விட்டு விலகியே இருக்கும் இவர்,  தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!
அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!