
மர்மமான முறையில் மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் சிலையில் இருந்து ரத்தம் வடிந்ததாக பரவிய புகைப்படத்தால் கேரளாவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மிமிக்ரி கலைஞராக பிரபலமாகி இன்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அது பற்றிய விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். அந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வருடம் கலாபவன் மணியின் சொந்த ஊரில் அவருக்கு குடும்பத்தாரும், ரசிகர்களும் சேர்ந்து சிலை ஒன்றை வைத்தனர்.
இந்நிலையில் அந்த நிலையில் தற்போது சிவப்பு நிறத்தில் ரத்தம் வடிவதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. வைரலாகிய அந்தப் புகைப்படங்களால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் அந்த சிலை செய்தவரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் உடனடியாக அந்தச் சிலையை நேரில் வந்து ஆய்வு செய்தார். அதில், சிலையில் இருந்து சிவப்பு நிறத்தில் வெளிவந்த திரவம் ரத்தம் இல்லை என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், ‘சிலையின் உள்ளே இரும்பு ராடுகள் உள்ளன.
கடந்தாண்டு கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், உள்ளிருக்கும் அந்த ராடுகள் துருப்பிடித்துள்ளன. தற்போது வெளியில் இருக்கும் பைபர் வெயிலுக்கு உருக ஆரம்பித்துள்ளது. இதனால், துருவும் அதனுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளிவந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
சிலை வடித்தவரின் இந்த தகவலும் வலைதளங்களில் உடனுக்குடன் ஷேர் செய்யப்படவே மக்கள் சாந்தமடைந்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.