
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சுஜா வாருணி தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறி, சமூகவலைதளத்தில் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
'பிளஸ் 2 ' திரைப்படத்தின் மூலம் 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், இவரால் தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
சில கன்னட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடினார். குணச்சித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
மேலும் கடந்த உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்து போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட கலந்துகொண்டார்.
இவர் பெரிதாக மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பையும் சம்பாதிக்கவில்லை, என்றாலும் ஓவியா போல் நடந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் காரணமாக குறைவான வாக்குகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும் கடந்த நவம்பர் மாதம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக சுஜா வாருணி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் முன்பைவிட சற்று குண்டாக இருக்கிறார் சுஜாவாருணி மேலும் பலர் இவர்கள் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.