கால் வைக்காமல் ஏணி ஏறும் சமந்தா..வேற லெவல் ஒர்கவுட் வீடியோ

Kanmani P   | Asianet News
Published : Apr 30, 2022, 03:02 PM IST
கால் வைக்காமல் ஏணி ஏறும் சமந்தா..வேற லெவல் ஒர்கவுட் வீடியோ

சுருக்கம்

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா தற்போது செய்துள்ள ஹார்ட் ஒர்கவுட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் இன்று முன்னணி நாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் சமந்தா. இவர் சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி முடித்தார். தமிழில் கௌதம் மேனன் இயக்கிய  விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, நான் ஈ படத்தின் மூலம் உலக அறிந்த  நாயகியானார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் அங்கும் பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதோடு தமிழில் முன்னணி நாயகனாக இருக்கும் சூர்யா, விஜய் போன்றவர்கள் படத்தில் நாயகியாக நடித்த சமந்தா ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த குடும்ப குத்துவிளக்காகவே நடித்தார்.

படங்களில் பிசியாக நடித்து வந்த சமந்தா தெலுங்கில் முன்னணி நாயகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் திருமணம் நான்கு ஆண்டுகள் மிகச் சிறப்பாகவே இருந்தது. அதோடு இந்த நட்சத்திர தம்பதிகளின் ரொமான்ஸ் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமாக இருந்தது. விரைவில் இந்த தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலைகள்  ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு செய்தியை இருவரும் வெளியிட்டனர். அதாவது கடந்த ஆண்டு தாங்கள் பிரியப்போவதை ஒரே நேரத்தில் சமூக வலைத்தளத்தில் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தனர் சமந்தா - நாக சைதன்யா.

பின்னர் அவரவர் தொழில்களில் மிகவும் பிஸியாக இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகின்றனர். தற்போது சமந்தா விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் நடித்துள்ள படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே திருமணத்திற்குப் பிறகு தனது போக்கை மாற்றிக் கொண்ட சமந்தா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். அதன்படியே சூப்பர் டீலக்ஸ், ஓ பேபி போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். எல்லாவற்றிற்கும் மேலாக புஷ்பா படத்தில் ஒரு ஐட்டம் சாங்கிற்கு  செம குத்து போட்டு ரசிகர்களை கவர்ந்து இருந்தார் சமந்தா.

ஓ சொல்றியா மாமா பாடலைத் தொடர்ந்து கவர்ச்சி பாதைக்கு திரும்பிய சமந்தா அவ்வப்போது செம கிளாமர் உடைகளை அணிந்து போட்டோ ஷூட் கொடுத்து வருகிறார். அந்த புகைப்படங்கள் எக்கசக்க வரவேற்புகளை பெற்றுவருகிறது. இதற்கிடையே வெப்சீரிஸ் கமிட்டாகி வரும் சமந்தா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் ஹார்ட் வொர்கவுட் செய்து. அந்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது மூங்கில் கொம்பில் ஏணியில் ஏறுவது போன்ற ஒர்க் அவுட் செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளி உள்ள சமந்தா, இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!