தொடர் தோல்வி.. பாணியை மாற்றிய ஆர்யா..விருமன் இயக்குனருடன் கிராமத்துக்கு செல்ல முடிவு..

Kanmani P   | Asianet News
Published : Apr 30, 2022, 01:00 PM ISTUpdated : Apr 30, 2022, 07:56 PM IST
தொடர் தோல்வி.. பாணியை மாற்றிய ஆர்யா..விருமன் இயக்குனருடன் கிராமத்துக்கு செல்ல முடிவு..

சுருக்கம்

 சமீபத்தில் கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கிய முத்தையா உடன் ஆர்யா கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜீவாவுடன் கடந்த 2003ஆம் ஆண்டு 'உள்ளம் கேட்குமே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஆர்யா அறியும் அறியாமலும் என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்னர் சோனியா அகர்வாலுடன் ஒரு கல்லூரியின் கதை, கலாபக்காதலன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் போதுமான அளவுக்கு கைகொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'நான் கடவுள்' படத்தில் வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கியிருந்தார். காசியில் பிணம் தின்னும் அகோரியாக நடித்திருந்த ஆர்யா பின்னர் இவர் நடித்த மதராசபட்டினம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏ.எல். விஜய் இயக்கிய இந்த படத்தில் வெளிநாட்டு அழகி எமி ஜாக்சன் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி கண்டது.

மேலும் செய்திகளுக்கு... கால் வைக்காமல் ஏணி ஏறும் சமந்தா..வேற லெவல் ஒர்கவுட் வீடியோ

பின்னர் சந்தானத்துடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவன் இவன், வேட்டை உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான ரோலில் தோன்றினார். அதோடு உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தார். அஜித்குமாரின் ஆரம்பம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து செல்வராகவனின் பிரமாண்ட திரைப்படமான இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்கா ஷெட்டியுடன் நடித்திருந்தார்.

முன்னதாக அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் ஆர்யா. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பெரிதாக வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. மதகஜராஜா, காதல் டூ கல்யாணம், மகாமுனி போன்ற படங்கள் அவருக்கு போதுமான வெற்றியை கொடுக்கவில்லை. இதையடுத்து காப்பான் படத்தில் சூர்யாவுடன் ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் சமீபத்தில் விஷாலுடன் இவர் நடித்த எனிமி படம் வெளியாகியிருந்தது படத்தில் எதிர்மறை ரோலில் ஆர்யா தோன்றியிருந்தாலும் இந்த படம் போதுமான வெற்றி காணவில்லை. இதற்கிடையேகடந்த 2009ஆம் ஆண்டு நடிகை த்ரிஷாவை காதல் திருமணம் செய்துகொண்டார் ஆர்யா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...தலைவி நாயகி கங்கனா ரனாவத்...தாறுமாறு கிளாமர் போட்டோ சூட்...

இந்நிலையில் சமீபத்தில் கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கிய முத்தையா உடன் ஆர்யா கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமத்து கதைகளை மையமாகக் கொண்டு படம் இயக்கும் முத்தையா தற்போது விருமன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதைத்தொடர்ந்து ஆர்யாவை வைத்து கிராம கதை இயக்குவார் என பேசப்படுகிறது. இந்த படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா வெகு சில படங்களிலேயே  கிராமத்து பின்னணியில் நடித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!