
அந்தப் படத்திலிருந்தே காதலித்து வந்த இருவரும், கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தாம்பத்திய வாழ்வில் இணைந்த பிறகும், சமந்தா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதனால், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதைக்கேட்டு கேட்டு சலித்துப் போன சமந்தாவிடம், மீண்டும் கர்ப்பம் குறித்து அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபத்தில் புனேவில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த சமந்தா, ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ வாயிலாக உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், "உங்களுக்கு குழந்தை எப்போது பிறக்கும்?" என கேட்டதற்கு, சற்றும் கோவிக்காமல் அதிரடியான பதிலை கொடுத்தார் சமந்தா.
"எனது உடல்நிலை பற்றி கவலை கொள்பவர்களுக்கு, எனக்கு குழந்தை எப்போது பிறக்கும் என்றால் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலை 7 மணிக்கு பிறக்கும்" என பதில் அளித்து கேள்வி கேட்ட ரசிகரை அசரடித்துள்ளார்
சமந்தா.எப்போது குழந்தை பிறக்கும்? என கேள்வி கேட்ட ரசிகருக்கு டெலிவரி தேதியைக் கூறி அசரடித்த சமந்தாவின் பதில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.