வரம்பு மீறாதீங்க !! காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் !!

Published : Nov 21, 2019, 07:38 AM IST
வரம்பு மீறாதீங்க !! காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் !!

சுருக்கம்

நடிகை காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டது. விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக  விளாசித் தள்ளினார்.. டுவிட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அதையும் டுவிட்டரில் வெளியிட்டார். தனக்கு போனில் வரும் அழைப்புகளையும் நேரலை செய்தார். வருகிற 27-ந்தேதி மெரினாவுக்கு வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை சந்தித்து விவாதிக்க தயாரா? என்றும் டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். மேலும் திருமாவளவன் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்றும் தெரிவித்தார்

இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு திடீரென்று முடக்கப்பட்டு உள்ளது. விதி முறையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

காயத்ரி ரகுராமை டுவிட்டரில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களுக்கு இந்த முடக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?