இந்தி சினிமாவில் ஆயிரம் பஞ்சாயத்துகள் இருந்தாலும் கூட பல ஹீரோக்கள் , ஹீரோயின்கள் ஒன்று கூடி ஒரே படத்தில் நடிப்பது வாடிக்கை . அல்லது கெஸ்டாகவாவது வந்து போவார்கள் . தமிழ் சினிமாவில் இல்லாத அந்த வழக்கத்தை அனிருத் தலைமுறை உருவாக்கிக் கொண்டுள்ளது . அந்த வகையில் விஜய்யின் ‘ பீஸ்ட் ’ படத்தின் ஓப்பனிங் பாடல் மேக்கிங் வீடியோவில் சிவகார்த்திகேயன் வருகிறாராம் . ஆக்சுவலி அவர்தான் அந்தப் பாடலை எழுதியவர் . (அப்படியே தளபதி காம்போவுல ஒரு படம் பண்ணுமா ரெமோ)
உலக காதலர் தினமான 14- க்கு பின் , உலக காவலன் தினமாக அஜித்தின் ‘ வலிமை ’ பிப்ரவரி 24- ம் தேதி ரிலீஸாகிறது என்று ஏ . கே . வின் ரசிகர்கள் இப்போதே பஞ்ச் டயலாக்கில் பின்னி எடுக்க துவங்கியுள்ளனர் . மேலும் வலிமைக்கு மிக கிராண்டான ஓப்பனிங்கை கொடுக்க திட்டமிட்டுள்ளனர் . அதற்குள் எப்படியும் நூறு சதவீதம் பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்கள் இயங்க துவங்கிவிடும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு . (ஆனா அஜித்ட்ட கேட்டால், பாதுகாப்பா தள்ளி தள்ளி உட்கார்ந்து படம் பாருங்கப்பா!ன்னு சொல்வார்)
சமந்தா மிக மோசமான கெட்டவார்த்தை பொறிக்கப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்து வலம் வந்த விவகாரம் வேறு லெவலில் கதைக்கப்படுகிறது . அதாவது தெலுங்கு சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நபரை திட்டும் தொனியில்தான் சமந்து இப்படி சம்பந்தமே இல்லாமல் கேவலமான வார்த்தைகளுடன் கூடிய டீ ஷர்ட்டை அணிந்தார் என்கிறார்கள் அவரது தோழிகள் . நாக சைதன்யாவுக்கும் , சமந்தாவுக்கும் இடையில் சமீபத்தில் சூழ்நிலை கொஞ்சம் சுகமானது . ஆனால் இதை ஒரு நபர் இடையில் புகுந்து குழப்பிவிட்டாராம் . அவரை திட்டவே இந்த டீ ஷர்ட்டாம் . (அதை தெலுங்குல திட்டியிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்குமே)
தமிழ்நாட்டுக்கு ஓடிடியில் சினிமா பார்க்கும் அனுபவத்தை அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்கு சூர்யாவுக்கு உண்டு . முதல் லாக்டவுன் துவங்கியதும் , தன் மனைவி பிரதான ரோலில் நடித்த ‘ பொன்மகள் வந்தாள் ’ எனும் படத்தை ஓடிடியில் வெளியிட்டார் . ஆனால் அது ஃபிளாப் . ஆனால் தனது நடிப்பில் உருவாகிய சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் என இரு படங்களை ஓடிடியில் வெளியிட்டார் . இரண்டுமே சூப்பர் ஹிட் . தியேட்டர் தொழிலை சூர்யா நசுக்குவதாக தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கடுப்பில் இருந்த நிலையில் இதோ நீண்ட இடைவெளிக்குப் பின் தியேட்டரில் வருகிறார் சூர்யா . எதற்கும் துணிந்தவன் ! மூலம் .
Subscribe to get breaking news alertsSubscribe தமிழ் சினிமா (Tamil Cinema News) , டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows) , செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review) , நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.