சினிமாவுக்கு 'குட் பை' சொல்லிவிட்டு குடும்ப குத்துவிளக்காக மாறும் சமந்தா...

 
Published : May 26, 2017, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
சினிமாவுக்கு 'குட் பை' சொல்லிவிட்டு குடும்ப குத்துவிளக்காக மாறும் சமந்தா...

சுருக்கம்

samantha saying good bye to cinema

தமிழில் விண்ணை தாண்டி வருவாயா தெலுங்கில் ஏ மாயா சேஷாவே படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான நடிகை சமந்தா, சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர்.

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் சம்மதத்தோடு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.இவர்களின்தி திருமணம் வரும் அக்டோபரில் நடக்கவுள்ளது.

திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. திருமண இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சமந்தா நடிப்பதில் இருந்து 3 மாதங்களுக்கு ஓய்வு எடுக்கவுள்ளார் என சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மையில்லை என சமந்தா தரப்பு தற்போது விளக்கமளித்துள்ளது.

தற்போது விஜய்61 படத்தில் நடித்துவரும் சமந்தா ஜூன் மாதம் வரை அதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார், பின்னர் சிவர்கார்த்திகேயனுடன் ஒரு படம், மகேஷ் பாபுவுடன் மற்றொரு படம் என பிஸியாக நடிக்கவுள்ளார். அதன்பிறகு சினிமாவிற்கு 'குட் பை' சொல்லிவிட்டு குடும்ப வாழ்க்கையில் தஞ்சமடையவுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ