Samantha workout video: ஷூட்டிங் தளத்திலும், விடாமல் ஒர்கவுட் செய்யும் சமந்தா...பார்த்து ஜொல்லு விடும் இளசுகள்

Anija Kannan   | Asianet News
Published : May 16, 2022, 12:36 PM IST
Samantha workout video: ஷூட்டிங் தளத்திலும், விடாமல் ஒர்கவுட் செய்யும் சமந்தா...பார்த்து ஜொல்லு விடும் இளசுகள்

சுருக்கம்

Samantha workout video: தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் பிஸியான நடிகையாக வலம் வரும் சமந்தா, ஷூட்டிங் தளத்திலும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். இவரது உடற்பயிற்சி வீடியோவை பார்ப்பதற்கு என்று பல்வேறு ரசிகர் பட்டாளம் உள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் பிஸியான நடிகையாக வலம் வரும் சமந்தா, ஷூட்டிங் தளத்திலும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். இவரது உடற்பயிற்சி வீடியோவை பார்ப்பதற்கு என்று பல்வேறு ரசிகர் பட்டாளம் உள்ளது.

சமந்தா ஒர்கவுட் சீக்ரெட்:

காலையில் 5 மணிக்கு ஜிம்முக்கு செல்வதாகவும், நன்கு வியர்வை வெளியேறி கலோரிகள் எரிக்கப்படும் அளவுக்கு பயிற்சிகள் மேற்கொள்வாராம். அதுமட்டுமின்றி, சமந்தாவின் தினசரி டயட்டில் சாலட்டுகள், பழங்கள், நட்ஸ், பெர்ரீஸ், காய்கறிகள் மற்றும் சிக்கன் போன்ற உணவு வகைகள் கட்டாயம் இடம் பெருமாம்.

சமந்தா தமிழ் சினிமா பயணம்:

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் சமந்தா. இன்று பான் இந்தியா நடிகையாக வளர்ந்து கொடி கட்டி பறக்கிறார்.தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்து  ஹிட் கொடுத்தவர்.

சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து:

சமந்தா, நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்கு பின் கவர்ச்சி பக்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ''ஓ சொல்றியா மாமா பாடல்'' பட்டி தொட்டி எங்கும் பரவி இளசுகளின் மனதை கொள்ளை கொண்டது.

காத்துவாக்குல ரெண்டு காதல்:

சமந்தாவின் நடிப்பில் தற்போது, வெளியான' காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான நாள் முதல், தமிழ் இளசுகள் நயன்தாராவை ஓரம் கட்டி விட்டு, சமந்தா பீவர் பிடித்து போய் திரிகின்றனர். 

தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சமந்தா, தெலுங்கில் யசோதா, சகுந்தலம், ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இவர், ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துவிட்டார். 

'குஷி' படம்: 

இதுதவிர பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய் நிர்வானா இயக்கத்தில் உருவாகும்  இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு குஷி என்று பெயரிடப்பட்டுள்ளதாம். மேலும் இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 

மேலும் படிக்க..kushi first look : காஷ்மீரில் விஜய்யோடு குஷியாக இருக்கும் சமந்தா... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
 

காஷ்மீர் தளத்தில் தாறுமாறு ஒர்கவுட் வீடியோ:

இந்நிலையில், காஷ்மீர் தளத்திலும், வேர்வை சொட்ட சொட்ட தனது வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு, எங்கு சென்றாலும், ஒர்க் அவுட் செய்வதை விடுவதில்லை என்று ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!