Kamal haasan : தமிழில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற ஜூன் 3-ந் தேதி பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது.
கமல் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.
தமிழில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற ஜூன் 3-ந் தேதி பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கடந்த வாரம் வெளியான பத்தல பத்தல என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. அதேபோல் நேற்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் மரண மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி யூடியூப்பில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.
விக்ரம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல், நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தெரிந்ததும் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் என் வீட்டுக்கு வந்து என்னைக் கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுதார். உங்களால் எப்படி சினிமா இல்லாமல் இருக்க முடியும்னு என்னிடம் கேட்டார். அந்தக் கேள்விதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது என கமல் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படியுங்கள்... kushi first look : காஷ்மீரில் விஜய்யோடு குஷியாக இருக்கும் சமந்தா... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்