
தெலுங்கின் இளம் நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவரும் தமிழ்,தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தாவும் கடந்த சில வருடங்களாக தீவிரமாகக் காதலித்து வந்தனர்.இவர்கள் காதலுக்கு இருவரின் வீட்டிலும்பச்சைக்கொடி காட்டப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் இரு வீட்டினரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில் வரும் அக்டோபர் 6-ம் தேதி சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் மிகப்பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது. சுமார் 1௦ கோடி செலவில் நடைபெறும் இந்தத் திருமணம் முதல் நாள் இந்து முறைப்படியும், அடுத்த நாள் கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெறவுள்ளது.
இரு குடும்பத்திலிருந்தும் மொத்தம் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் திரைப்பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லையாம். அக்டோபர் 1௦-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் சமந்தா-நாக
சைதன்யா திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.