அவ என் தங்கச்சிடா... கொன்னுடாதீங்க... சமந்தாவுக்காக நாக சைதன்யாவிடம் உருகும் சகோதரர்..!

Published : Oct 12, 2021, 04:51 PM IST
அவ என் தங்கச்சிடா... கொன்னுடாதீங்க... சமந்தாவுக்காக நாக சைதன்யாவிடம் உருகும் சகோதரர்..!

சுருக்கம்

ஒரு பக்கம் வருமானத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் மற்றொரு பக்கம் தாங்க முடியாத மன வேதனையில் தவித்து வருகிறார் சமந்தா.   

ஒரு பக்கம் வருமானத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் மற்றொரு பக்கம் தாங்க முடியாத மன வேதனையில் தவித்து வருகிறார் சமந்தா. 

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்திருந்தனர். பல உரையாடல்கள் மற்றும் யோசனைகளுக்கு பிறகு நானும் சாயும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் அழகான நட்பு உள்ளது. அது இனியும் தொடரும் என அதில் இருவருமே குறிப்பிட்டனர்.

இந்நிலையில், நாகசைதன்யா ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பிரீதம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் பிரிவுக்கு காரணம் அவரது ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று வதந்தி பரவி வருகிறது. பிரீதம் ஜுகல்கருடன் நடிகை சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதனால், பிரீதம் ஜுகல்கரை அவதூறாக திட்டியும், மிரட்டல் விடுத்தும் நாகசைதன்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். 

இதுகுறித்து பிரீதம் ஜுகல்கர் கூறுகையில், ‘‘எனக்கும், சமந்தாவுக்கும் தவறான தொடர்பு உள்ளது என்றும், இதனாலேயே சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் பிரிவு ஏற்பட்டு உள்ளது என்றும் தகறான தகவல் பரப்பி உள்ளனர். இதன் மூலம் சமந்தாவை அவதூறு செய்துள்ளனர். சமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன். 

அவரை சகோதரி என்றே அழைக்கிறேன். எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை என்பது நாகசைதன்யாவுக்கு தெரியும். ஆனாலும் அவர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்” எனக்கூறியுள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?