
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருப்பவர்களின் ஒருவர் நடிகை சமந்தா.
இவரும், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்ததை தொடர்ந்து. இருவர் வீட்டு சம்மதத்துடன் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்நிலையில், நாகசைதன்யாவிற்காக சமந்தா இந்து மதத்திற்கு மாறினார் என ஒரு சில தகவல்கள் வெளிவந்த போது, அதனை தொடர்ந்து மறுத்து வந்த சமந்தா. மதம் மாறியதை உறுதிசெய்வது போல் ஒரு காரியத்தை செய்துள்ளார்.
இன்று தெய்வத்திருத்தலங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்தினரோடு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அவரை தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கினார். சாமிதரிசனம் முடித்து விட்டு கோவிலுக்கு வெளியே வந்த சமந்தாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர். இதனால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
மேலும் சமந்தா, விரைவில் நடக்க இருக்கும் தன்னுடைய திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்கிற வேண்டுதலோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.