
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, முன்னணி நடிகர்கள் படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் சமந்தா. மேலும் துணிச்சலான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடம் சிறந்த நடிகை என்று பெயர் எடுத்து விட்டார்.
சமீபத்தில், இயக்குனர் 'தியாகராஜா குமாராஜாரா' இயக்கத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் இவர் நடித்திருந்த வேம்பு கதாபாத்திரம், பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்தலும், இப்படி ஒரு கேரக்டரில் தைரியமாக நடித்ததற்கு, தேசிய அளவிலான ஊடகங்கள் கூட இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.
'சூப்பர் டீலக்ஸ்' படத்தில், சமந்தா கணவருக்கு தெரியாமல் கல்லூரி மாணவர் ஒருவருடன் உறவு வைத்து கொள்பவராக நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் கூறி புது சர்ச்சையில் சிக்கியுள்ளார் சமந்தா.
அதாவது, வேம்பு கதாப்பாத்திரம் குறித்து அவர் கூறுகையில், கண்டிப்பாக கணவருக்கு தெரியாமல் காதலருடன் உறவு வைத்து கொள்வது தவறில்லை. இந்த கேரக்டரை பார்த்து முதலில் ஆதங்கப்படும் அனைவருமே கடைசியில் வேம்புவை பார்த்து பரிதாப படுவார்கள் என கூறியுள்ளார்.
சமந்தா கணவருக்கு தெரியாமல், காதலனுடன் தவறாக இருந்தால் தப்பில்லை என கூறியுள்ளது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.