மெர்சல் டப்பிங் பேசிய சம்மு... பார்சிலோனாவிலிருந்து பாராட்டிய தளபதி!

 
Published : Sep 29, 2017, 08:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
மெர்சல் டப்பிங் பேசிய சம்மு... பார்சிலோனாவிலிருந்து பாராட்டிய தளபதி!

சுருக்கம்

Samantha Completed Dubbing For Her Role in Mersal

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் மெர்சல் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவரான நடிகை சமந்தா தனது டப்பிங் பணியை நேற்று முடித்துள்ளார்.

தெறி படத்தின் வெற்றிக்குப்பின் அட்லீ விஜய் இணைந்திருக்கும் மெர்சல் படத்தின் டீஸர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது, முந்தைய பட டீஸரின் சாதனைகளையும் முறியடித்து வருகிறது. 

இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சமந்தாவின் டப்பிங் பணிகள் மட்டுமே முடிவடையாமல் இருந்த நிலையில், தற்போது சமந்தா டப்பிங் பணியை முடித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சமந்தா திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்க உள்ளது. திருமண தேதி நெருங்குவதால் "யுத்தம் சரணம்" படத்தை அடுத்து நாக சைதன்யா நடிக்கவிருந்த தெலுங்கு படத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல சமந்தா படங்களில் நடிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மெர்சல் படத்தில் சமந்தா டப்பிங் பேச வரவில்லையென்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் அட்லீ. இந்த தகவலை அறிந்த சமந்தா  சென்னை வந்து தனக்கான டப்பிங்கை பேசிவிட்டு சென்றிருக்கிறார். சமந்தா டப்பிங் பேசிய சேதி பார்சிலோனாவில் இருக்கும் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சமந்தாவைத் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!