
மீண்டும் ஜோடி சேரும் சமந்தா:
அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் ஒன்பது வருடத்திற்கு பின் மீண்டும் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதி - திரிஷா நடித்த 96 படத்தை தயாரித்த நந்தகோபால் தயாரிக்கிறார்.
இவர் ஏற்கனவே ரோமியோ ஜூலியட், கத்தி சண்டை, சில்லுனு ஒரு காதல், மச்சக்காரன், கலாபக் காதலன், ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்கும் போட்டா போட்டி?
நகைச்சுவை நடிகரான சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய பின் அவருடைய இடம் காலியாக கிடக்கிறது. அந்த இடத்தை நிரப்பி வந்தவர் நடிகர் சூரி. தற்போது யோகிபாபுவுக்கும் அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
அவருடைய உடல் மொழியும், வசனங்களை உச்சரிக்கும் விதமும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால், தொடர்ந்து யோகி பாபு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே தற்போது இருவரும் கோடிகளில் சம்பளம் வாங்குவதாக பேசப்பட்டது.
அதில் உண்மை இல்லை என்று யோகிபாபு மறுத்தார். இப்போது சூரியா? யோகி பாபுவா? என்ற கேள்வி எழுகிற அளவுக்கு இருவருக்கும் இடையே போட்டா போட்டி நடந்து வருகிறதாம். ஆனால் இதை இருவருமே வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.