பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த கழுதைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Published : Jul 14, 2022, 06:30 PM IST
பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த கழுதைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

சுருக்கம்

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கழுதைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அந்த கழுதைக்கு 8.5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற படத்தில் நடிக்கும் பிராணிகளுக்கு சம்பளம் கொடுப்பது இது முதல் முறையல்ல.. 

வித்தியாசங்களுக்கு பெயர் போனவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இவரின் தற்போதைய படைப்பான இரவின் நிழல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  வரும் 15ஆம் தேதி நாளை வெளியாகியுள்ள இந்த படம் குறித்து ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். 29 நிமிடம் மேக்கிங் வீடியோவை பார்த்த வியந்ததாக குறிப்பிட்ட சூப்பர் ஸ்டார், சினிமாவின் உலகின் முதல்முறையாக ஒரே ஷாட் படமான இரவின் நிழல் உருவாக்கிய பார்த்திபனின் முயற்சியை பாராட்டுவதாகவும், அணி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஒற்றை ஷாட் படம் நிஜ வாழ்க்கையை போலவே நேரம் மற்றும் இடத்தின் தொடர்ச்சியின் மாயையை உருவாக்குகிறது. எடிட்டர் இல்லாமல் படத்தின் அனைத்து காட்சிகளும் ஒரே சாட்டில் படமாகி இருக்கிறது என்கிறது பட குழு. ஷார்ட் நான் லீனியர் படம் இரவின் நிழல் ஒரு தொழில்நுட்ப தலைசிறந்த படைப்பாகும். இதன் மேக்கிங் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் செய்திகளுக்கு...முன்பு முதல்வர்..தற்போது பிரதமர்...இந்திரா காந்தியாக எமர்ஜென்சியில் கலக்கும் கங்கனா..டீசர் உள்ளே!

அதாவது 96 நிமிடங்கள் ஓடும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரே நேரத்தில் செட் தயாராகியுள்ளது.  ஒரு காட்சியில் நடக்கும் நடிகர்கள் தங்கள் உடையை மாற்றிக்கொள்ள 20 நிமிடங்களுக்கு குறைவாகவே நேரம் இகொடுக்கப்பட்டுள்ளது.  அடுத்த காட்சியின் செட்டுக்கு விரைந்து செல்ல வேண்டும் எந்த துறையை சேர்ந்த நடிகர்கள் அல்லது படகுழுவினர் யாராயினும் ஒருவரின் சிறிய தவறு முழு படத்தையும் ஆரம்பத்திலிருந்து மறுபடியும் எடுக்க வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளும்.  இந்த படமானது கதை சொல்லல் பாணியை கொண்டிருப்பதால் கதையின் காலம் முன்னும் பின்னும் மாறிக்கொண்டே இருக்கும். உண்மையில் படத்தை திரையிடுவதற்கு முன் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

பார்த்திபன், நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னாள் இருந்த சவாலின் மகத்தான தன்மையும் 340 பேர் கொண்ட முழு யூனிட்டும்  சிக்கல்களை முறியடித்த புத்திசாலித்தனமான மற்றும் தொழில் முறைகளும் இது காட்டுகிறது. பல செட்களுக்கு 64 ஏக்கர் நிலத்தில் முடிவு செய்து அதில் 58 செட்களை போட்டுள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு... நட்சத்திராவின் கணவரை திட்டி தீர்த்த ஸ்ரீநிதி...திருமணத்திற்கு பின்னர் என்ன செய்தார் தெரியுமா?

பார்த்திபன் இந்த சவாலான படத்தின் தனிநபரின் வாழ்க்கையைப் பற்றி கொடூரமான கதையை விவரிக்கிறார். தன் மகள் தன்னிடம் திரும்பி வருவாள் என்று ஏங்கும்போது அந்த கதை தொடங்குகிறது. இரவின் நிழல் இந்த கொடுமையான உலகில் வாழ முயலும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன் சிறுவனாக இருந்த காலத்தில் நடக்கும் விஷயங்களை காட்டுகிறது. படத்தில் அனைத்து நடிகர்களின் குறிப்பாக பார்த்திபனின் அருமையான நடிப்பு உள்ளது.  போலி பெண் சாமியாராக வரும் வரலட்சுமி அவர் தோன்றிய குறுகிய காலகட்டத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏ ஆர் ரகுமானின் இசை மிகச் சிறப்பாக உள்ளது. அவருடைய பின்னணி இசையாக இருந்தாலும் சரி அவருடைய பாடல்களாக இருந்தாலும் சரி ரசிகர்களை ஈர்க்கும் வண்ணமே உள்ளது. பார்த்திபனின் பங்களிப்பு குறித்து பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இரவின் நிழலின் கதை  அர்த்தமுள்ள கதையாக இருக்கிறது என பாராட்டு தெரிவித்து வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு...மனைவியாக வாழ்ந்தால் மாதம் 25 லட்சம் சம்பளம் : மனம் நொந்த விஷால் பட நடிகை !

இந்நிலைகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கழுதைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அந்த கழுதைக்கு 8.5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற படத்தில் நடிக்கும் பிராணிகளுக்கு சம்பளம் கொடுப்பது இது முதல் முறையல்ல.. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!