
பிக்பாஸ் வீட்டில் நான்காவது தலைவர் பதவிக்கு ஏற்கனவே மூன்று பேரை, பிக்பாஸ் தேர்வு செய்தார். அவர்கள் வனிதா, சாக்ஷி மற்றும் மோகன் வைத்தியா ஆகியோர்.
லக்சூரி பட்ஜெட்டுக்காக நடத்தப்பட்ட, கொலைகாரன் டாஸ்கில், சிறப்பாக விளையாடியதற்காக இந்த மூன்று பேரையும் பிக்பாஸ் தேர்வு செய்தார். அவர்களில் ஒருவரை இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்ய நேற்று போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் பங்கேற்ற மூன்று போட்டியாளர்களுக்கு, பச்சை, மஞ்சள், நீலம், என மூன்று நிறங்களில் ஜாக்கெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அவர்கள் மீது பிக்பாஸ் கொடுத்த ஒரு ஸ்ட்ரிக்கரை மூவரில் ஒருவர் ஓட்டினால் அவர்கள் இந்த வார தலைவர் பதவியில் இருந்து விளக்கப்படுவார்கள்.
முதல் ஆளாக மோகன் வைத்தியா, வனிதா மீது ஸ்ட்ரிக்கரை ஒட்ட முயற்சித்த போது , வயது முதிர்வு காரணமாக ஓட முடியவில்லை என இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரை தொடந்து சாக்ஷி மற்றும் வனிதா இடையே இந்த போட்டி நடைபெற்றது.
அப்போது வனிதாவால், சாக்ஷி மீது அந்த ஸ்டிக்கரை ஒட்ட முடியவில்லை ஆனால் அவர் மேலே தூக்கிப் போட்டுவிட்டு கேம் முடிந்துவிட்டது என கூறினார். இதனால் பிக்பாஸ் என்ன பதில் சொல்வார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், சாக்ஷி தான் பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் என்றும், அவரை அடுத்த வாரத்திற்கு யாரும் நாமினேட் செய்ய முடியாது என கூறினார் பிக்பாஸ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.