கவர்னராகிறார் அதிமுக முன்னாள் எம்.பி..? எடப்பாடி - ஓ.பி.எஸை வெறுப்பேற்ற மோடி கொடுக்கும் மெகா ஆஃபர்..!

Published : Jul 13, 2019, 03:44 PM IST
கவர்னராகிறார் அதிமுக முன்னாள் எம்.பி..? எடப்பாடி - ஓ.பி.எஸை வெறுப்பேற்ற மோடி கொடுக்கும் மெகா ஆஃபர்..!

சுருக்கம்

ராஜ்ய சபா பதவியை இழந்த எம்.பி., மைத்ரேயன் மீது பாஜகவின் கருணை பார்வை விழ ஆரம்பித்து இருக்கிறது.   

ராஜ்ய சபா பதவியை இழந்த எம்.பி., மைத்ரேயன் மீது பாஜகவின் கருணை பார்வை விழ ஆரம்பித்து இருக்கிறது. 

அதிமுகவில் இரு முறை ராஜ்யசபா எம்.பியாக இருந்த மைத்ரேயன் அடுத்து ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவாக இருந்தார். இம்முறையும் அவர் ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுகவிடம் அடம்பித்து வந்தாற். ஆனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

வெறுத்துப்போன அவர், இனியும் ஓ.பி.எஸை நம்பி இருந்தால் பலன் கிடைக்காது என்கிற முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பாஜகவில் இருந்து தான் அதிமுகவுக்கு தாவினார். ஆனாலும், பாஜக தலைவர்களுடன் நெருக்கம் இன்னும் இருந்து வருகிறது. ஓ.பி.எஸின் டெல்லி தொடர்புகளுக்கு இவரும் ஒரு முக்கிய காரணம். 

இந்நிலையில் நேரடியாக பாஜகவுக்கு தாவும் எண்ணத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அவர் பிரதமர் மோடியை நேற்று முன் தினம் சந்தித்தார். அந்தச் சந்திப்பு மைத்ரேயனுக்கு பலனளிக்கும் விதமாக இருக்கும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பாஜகவுக்கு மாறுகிறாரா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் நிச்சயமாக அவரை ஒரு மாநிலத்தின் கவர்னர் அல்லது மத்தியில் ஒரு முக்கியமான பதவியில் அமர்த்த மோடி தீர்மானித்துவிட்டாதாகக் கூறப்படுகிறது. அதன் அச்சாரம்தாம் பதவி ஓய்வுக்கு பிறகு மோடியைச் சந்தித்து புகைப்படமும் எடுத்து அதனை வெளியிட்டார் என்கிறார்கள். 

அப்போது இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். எல்லாம் பாசிட்டிவ்வாக இருந்ததாக சொல்கிறார்கள். அவரின் சந்திப்பு தமிழகத்தில் எடப்பாடிக்கும், ஓ.பி.எஸுக்கும் தேள் கொட்டியது போல் ஆகி விட்டதாம். உடனடியாக டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகளுக்கு போன் போட்டு என்ன நடந்தது..? அப்பாயின்மென்ட் யாரை கேட்டு வாங்கி கொடுத்தீர்கள். உள்ளே பேசிய விஷயங்கள் அனைத்தும் எனக்கு வந்து சேர வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளார்களாம். அவர்களும் தகவல்களை சேகரிக்கும் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!