
பிக்பாஸ் வீட்டில், வனிதா வெளியேறியதால் இருந்து சத்தம் குறைவாக இருந்தாலும் காதல் பிரச்சனைகள் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. லாஸ்லியாவை கவின் சுற்றி சுற்றி வந்ததால், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உள்ளதாக, நினைத்து கொண்டார் சாக்ஷி. இதனால் இவர் லாஸ்லியாவை சாக்லேட் விஷயத்தை வைத்து சண்டைக்கு இழுத்தார்.
இந்த நிலையில் இந்த காதல் பிரச்சனைக்கு, தற்போது லாஸ்லியா முடிவு கட்டுவது போல் வெளியாகியுள்ளது இன்றைய ப்ரோமோ. சாஷியிடம் கவின் காதலை ஏற்று கொள்ளுமாறும், தனக்கு கவினுடன் காதல் இல்லை என்றும், அவனை தனக்கு பிடிக்கும் ஆனால் அது லவ் இல்லை என்றும், நீங்கள் இருவரும் இணைந்தால் தனக்கு சந்தோஷம் என்றும் கூறுகிறார்.
இதனை சாக்சி ஏற்று கொள்வாரா, அல்லது கவினை அவரும் கழட்டி விடுவாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.
ஆனால் இன்றைய புரமோவில் சாக்சியும், மீராமிதுனும் ஜெயிலில் இருக்கும் காட்சி காட்டப்படுகிறது . ஏன் இருவரும் ஜெயிலில் உள்ளனர் என்பது தெரியவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.