
Sai Pallavi Hates Makeup : நடிகை சாய் பல்லவி, இப்போது பான்-இந்தியா நடிகையாக வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மலையாளத்தில் 'பிரேமம்' படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகை சாய் பல்லவி, பின்னர் தெலுங்கு, தமிழ் சினிமா உலகிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். தற்போது, கேஜிஎஃப் புகழ் ராக்கிங் ஸ்டார் யாஷ், பாலிவுட் ஸ்டார் நடிகர் ரன்பீர் கபூர் ஆகியோருடன் நடிகை சாய் பல்லவியும் 'ராமாயணம்' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுதவிர தமிழில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள காதல் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் சாய் பல்லவி. அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி மேக்கப் பற்றி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகை சாய் பல்லவி, 'பிரேமம் படத்திற்குப் பிறகு நான் நடித்த ஒரு படத்தின் போட்டோஷூட்டின் போது எனக்கு லென்ஸ் மற்றும் மேக்கப் போடப்பட்டது. ஆனால், பின்னர் படத்தின் இயக்குனர் 'மேக்கப்-லென்ஸ் வேண்டாம், நீங்கள் இருப்பது போலவே போதும்' என்று கூறி இயல்பாக படப்பிடிப்பு நடத்தினார்கள். என் பார்வையில், ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் மேக்கப் செய்து வித்தியாசமாகக் காட்டுவதை விட, அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருந்தால் போதும். ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரம் செதுக்கப்பட்ட விதம் வித்தியாசமாகவே இருக்கும், அதனால் நாமும் மக்களுக்கு வித்தியாசமாகவே தெரிவோம்.
என் பார்வையில், ஒவ்வொரு படத்திலும் கலைஞர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால், இயல்பாகவே வித்தியாசம் இருக்கும். ஆனால், ஒரே மாதிரியான கதாபாத்திரத்திற்கு வெவ்வேறு விதமான ஹேர்ஸ்டைல் மற்றும் மேக்கப் செய்தால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது என் நிலைப்பாடு. இது என் நிலைப்பாடு என்பதை விட, நான் பணியாற்றிய அனைத்துப் படங்களின் இயக்குநர்களின் நிலைப்பாடும் இதுவே என்று சொல்லலாம். அதனால் எனக்கு எப்போதும் மேக்கப் தொல்லை பெரிதாக இருந்ததே இல்லை' என்று கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.