அட... இது வேறலெவல் காம்போவா இருக்கே!! முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி

By Ganesh Perumal  |  First Published Jan 27, 2022, 12:28 PM IST

தமிழில் ஏற்கனவே தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே, மற்றும் வெற்றிமாறன் இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார் சாய் பல்லவி.


சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

இவர் நடிப்பதோடு மட்டுமின்றி எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். 

Tap to resize

Latest Videos

தற்போது இவர் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர சமீபத்தில் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமாருடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி உறுதியானால், சிவகார்த்திகேயனுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இது அமையும்.

நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே, மற்றும் வெற்றிமாறன் இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!