மத்திய அரசு வேலைக்கு இழப்பு வராது என்ற இறுமாப்பா? சீனாக சீனுக்கு வந்து கிழித்து தொங்கவிட்ட கஸ்தூரி.!

By vinoth kumarFirst Published Jan 27, 2022, 6:47 AM IST
Highlights

வடக்கத்திக்காரர்கள், புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ்த்தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரபூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது, சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ்  வங்கி அலுவலகத்தில்  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ரிசர்வ் மண்டல இயக்குனர் தேசியக் கொடியை ஏற்றி மாரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டது. அப்போது அதற்கு வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் இதுகுறித்து சிலர் கேட்டபோது எழுந்து நிற்கமுடியாது என அவர்கள் கூறினார்கள். தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். 

தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது எழுந்து நிற்காதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில்,  தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ்த்தாயை மதிக்க தோன்றவில்லையா? என நடிகை கஸ்தூரி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வடக்கத்திக்காரர்கள், புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ்த்தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரபூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள்.

வடக்கத்திக்காரர்கள் ,புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ்த்தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரபூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள்.1/2 https://t.co/SKhhLBdvxA

— Kasturi Shankar (@KasthuriShankar)

 

மத்திய அரசு வேலைக்கு எந்த  இழப்பும் வராது என்ற இறுமாப்பா? அரசாணையை மீறிய குற்றத்துக்கு தண்டனையோ அபராதமோ  விதிக்க வேண்டும்! Shocked to see Tamilians working in TamilNadu disrespecting the official Tamil State song. We must   respect each state and it's official policies என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

click me!