குண்டானதால் கழட்டிவிடப்பட்ட சீரியல் நாயகி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ZEE Tamil

Kanmani P   | Asianet News
Published : Jan 26, 2022, 03:32 PM IST
குண்டானதால் கழட்டிவிடப்பட்ட சீரியல் நாயகி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ZEE Tamil

சுருக்கம்

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரக்ஷா ஹோல்லா தற்போது ஜீ தமிழின் அன்பே சிவம் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். அவர் இந்த தொடர் மூலமாக கடந்த வருடம் ரீஎன்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது அதில் இருந்து திடீரென நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருகிறது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர்.. முன்பு இல்லத்தரசிகளை கவர்ந்து வந்த சீரியல்கள் தற்போது அதிக ரசிகர்களை கொண்டுள்ளது.. அதிலும் சீரியல் அக்டர்ஸுக்கு சினிமா பிரபலங்களை விட அநேக ரசிகர்கள் உள்ளனர்...

ஒவ்வொரு ஆக்டருக்கும் சுமார் 1 மில்லியன் பாலோவர்சாவது இருக்கத்தான் செய்கிறார்கள்..சிரியல்களில் சின்ன மாறுதல் என்றாலே ரசிகர் பட்டாளம் கொந்தளித்து விடுகிறது.. அந்த வகையில் தற்போது உடல் எடை அதிகமாக இருப்பதாக கூறி பிரபல சீரியல் நடிகை தொடரில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரக்ஷா ஹோல்லா தற்போது ஜீ தமிழின் அன்பே சிவம் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். அவர் இந்த தொடர் மூலமாக கடந்த வருடம் ரீஎன்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது அதில் இருந்து திடீரென நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருகிறது.

ரக்ஷாவின் உடல் எடை கூடியது தான் இந்த முடிவுக்கு காரணம் என்றும் தகவல் பரவி வருகிறது. மேலும் இனி அன்பு ரோலில் கவிதா கௌடா என்ற புது நடிகை நடிக்க போகிறார் என்றும் செய்தி வந்திருக்கிறது. 

ஏற்கனவே  “ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை 15.01.2022 (ஜனவரி 15) அன்று Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அந்த ஷோவில் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் வகையில் இரண்டு குழந்தை போட்டியாளர்கள் ஒரு குறும்படத்தை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடர்பாக ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்வாறு எக்கச்சக்க கெடுபிடிகளில் சிக்கியுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது புரபல நடிகை குண்டாக இருந்த ஒரே காரணத்திற்காக நாடகத்தை விட்டு விலக்கி இருப்பது குறித்து பெரும் சர்ச்சை வெடித்து வருகிறது...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!