
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் மாறன். துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.
மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாறன் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
நேற்று பொல்லாத உலகம் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது..ஜீவி இசையில் தனுஷ் போடும் துள்ளல் ஆட்டத்துடன் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.மைக்கில்ஜாக்சன் ஸ்டெப்பில் அசத்தும் தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார்.. பொல்லாத உலகம் பாடல்..விவேக் வரிகளில், தனுஷ - அறிவு குரலில் மாஸ் காட்டவுள்ளது..
இந்நிலையில் தனுஷின் மாறன் படத்திலிருந்து பொல்லாத உலகம் வீடியோ சாங் வெளியாகியுள்ளது..ஜீவியில் செம்ம மாஸ் இசையில் துள்ளல் ஆட்டம் போடவைக்கும் இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.