சித்தா பட விழாவில் புகுந்து நடிகர் சித்தார்த்தை பேசவிடாமல் தடுத்த போராட்டக்காரர்களை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கடுமையாக சாடி உள்ளார்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஏராளமான கன்னட அமைப்புகள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதால், கர்நாடகா முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கர்நாடக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று நடிகர் சித்தார்த் தான் நடித்த சித்தா திரைப்படத்தை புரமோட் செய்வதற்காக பெங்களூரு சென்றிருந்தார். அப்போது அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டார். பத்திரிகையாளர்களுடன் சித்தார் கலந்துரையாடும் போது திடீரென உள்ளே நுழைந்த கன்னட அமைப்பினர், சித்தார்த்தை பேச விடாமல் தடுத்தனர். இதனால் டென்ஷன் ஆன சித்தார்த்த் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கன்னட அமைப்பினரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னட அமைப்பினரின் இந்த செயலை கண்டித்ததோடு, நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை, நடிகர் சித்தார்த் அவமதிக்கப்பட்ட விவாகரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
அதில், நடிகர் சித்தார்த் அவர்களை பேச விடாது தடுத்து அனுப்பியிருக்கிற கன்னட இனவெறியர்களின் போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. கன்னட நடிகர்கள் தமிழ்நாட்டில் பெரிதும் நடிக்கிறார்கள் என்பது இந்த இனவெறி கும்பலுக்கு தெரியுமா தெரியதா? பதிலுக்கு நாங்கள் செய்ய ஆரம்பித்தால் ஒரு கன்னட நடிகர்களின் படம் தமிழ்நாட்டில் ஓடாது! முதல்வரே கொஞ்சம் கூட உங்களுக்கு கோவம் வரவில்லையா என அந்த பதிவில் சாட்டை துரை குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சித்தா பட சர்ச்சை.. "சித்தார்த் மன்னிச்சுருங்க.. கன்னடர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன்" - பிரகாஷ்ராஜ் ட்வீட்