தமிழர்களை இழிவுபடுத்துவதாக எண்ணி தன் தலையில் மண் அள்ளிக்கொட்டும் எஸ்.வி.சேகர்...

Published : May 27, 2019, 11:01 AM ISTUpdated : May 27, 2019, 11:23 AM IST
தமிழர்களை இழிவுபடுத்துவதாக எண்ணி தன் தலையில் மண் அள்ளிக்கொட்டும் எஸ்.வி.சேகர்...

சுருக்கம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கமெண்ட் அடித்துவிட்டு நீண்ட நெடுங்காலமாகத் தலைமறைவாக இருந்த கோமாளி நடிகர் எஸ்.வி.சேகர் மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியைப் பிடித்த மமதையில் மொத்தத் தமிழ் சமூகத்தையும் அவமரியாதை செய்யும் வகையில் மீண்டும் ஒரு ட்விட்டர் வெளியிட்டு தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்டுள்ளார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கமெண்ட் அடித்துவிட்டு நீண்ட நெடுங்காலமாகத் தலைமறைவாக இருந்த கோமாளி நடிகர் எஸ்.வி.சேகர் மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியைப் பிடித்த மமதையில் மொத்தத் தமிழ் சமூகத்தையும் அவமரியாதை செய்யும் வகையில் மீண்டும் ஒரு ட்விட்டர் வெளியிட்டு தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் இந்தத் தேர்தலிலும் தாமரை மலரவே மலராத நிலையில்  பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகம் பெரியார் மண் என்றும் இங்கு தாமரை ஒருபோதும் மலராது என்றும் தி.மு.க கூட்டணி தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் பா.ஜனதா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை தோற்கடித்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு மத்திய மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்து விட்டனர் என்றும், தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

மக்கள் சரியாகவே வாக்களித்தனர் என்று அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் பலர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். வலைத்தளத்தில் இது கடுமையான விவாதமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒருவர் தனது தலையில் மண்ணை அள்ளிக்கொட்டும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘ஓ இதுதான் தமிழ் மண்ணா’ என்று துவங்கி தொடர்ச்சியாக அந்த மண்ணுக்கு பல விளக்கங்கள் கொடுத்து ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தை இழிவு படுத்திவருகிறார். 

எஸ்.வி.சேகரின் அப்பதிவுக்குக் கீழே பிரசுரம் செய்ய முடியாத அளவுக்கு அசிங்கமான கெட்ட கெட்ட வார்த்தைகளால் மக்கள் அவரை அர்ச்சித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நயன்தாரா கணவர்னு சொல்றதுல எனக்கு பெருமை... இயக்குநர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்
T.R in Vijayakanth Movie: டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!