
ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகை குஷ்பு மற்றும் பிக் பாஸ் காயத்ரி ஆகியோர், ட்விட்டரில் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இருவரும், அவர்களுடைய கட்சிக்காக தான் இந்த சண்டையை போட்டுள்ளனர். அதாவது நடிகை காயத்ரி ரகுராம் அவருடைய டுவிட்டர் பகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை வம்புக்கு இழுக்கும் விதமாக, ட்விட் ஒன்றை போட்டார்.
அதில் "முதலில் உங்களுடைய அமேதி தொகுதிக்கு ஏதாவது செய்துவிட்டு, பின் ஓட்டு கேளுங்கள். பாவம் வயநாடு மக்கள். பொய் சொல்லியே வாக்குகளை வாங்க முடியாது என ராகுல் காந்தி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு டேக் செய்து ஒரு ட்வீட் போட்டார். மேலும் உங்களுடைய பொய்களை இந்தியா நம்பாது, உங்களுடைய சென்டிமெண்ட் கதைகளை தமிழக மக்கள் நம்பி விட்டனர் என்றும், வேறு எங்காவது போய் முயற்சி செய்யுங்கள் என பதிவிட்டிருந்தார்".
இதற்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்து ட்விட் ஒன்றை போட்டார். அதில் "காயு கண்ணா சீக்கிரம் உடல் நலம் சீராகி வா.. கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்". இவர்களின் இருவரும் அரசியல் கட்சியை வைத்து சண்டை போட்டு கொண்ட செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.