29 years of vijay : "விஜய் சமூக அக்கறை கொண்டவர்; இதுவே தேர்தல் வெற்றிக்கு காரணம் ":எஸ்.ஏ.சந்திரசேகர்!!

By Kanmani PFirst Published Dec 4, 2021, 3:35 PM IST
Highlights

29 years of vijay : விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியல் தலைவர்களாக தங்களை பரிமானித்துக்கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில்  ஏற்கனவே ரஜினி, கமல் அரசியலில் என்ட்ரி கொடுத்து விட்டனர். ஆனால் ரஜினிகாந்த தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் துவங்கிய மக்கள் இயக்கம் என்னும் கட்சியை களைப்பதாகவும், அரசியல் நுழைய விருப்பம் இல்லையென்றும் கூறி பின் வாங்கி விட்டார். இவர்களை தவிர தற்சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களில் அஜித் தனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் என கூறிவிட, விஜயை எப்படியாவது அரசியல் தலைவராக்கி விடுவது என அவரது ரசிகர்களும், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் பெரும் முயற்ச்சி செய்து வருகின்றனர். இதற்காக  விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய விஜயின் தந்தை தேவையான ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.

பின்னர் தனது பெயரை பயன்படுத்த நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிக்க இக்கட்சியின் மாநில தலைவர் பத்மநாபன், பொருளாளரான விஜய்யின் தாய் ஷோபா ஆகியோர் ராஜினாமா செய்தனர்.இதனால் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய வேண்டாம் என்று சந்திரசேகர் கடந்த நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.. 

ஆனால் ரசிகர்கள் விடுவதாக இல்லை கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் போட்டியிட்ட விஜய் ரசிகர்கள் 121 இடங்களில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்திருக்கிறார்கள். இவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய் திரையுலகிற்கு வந்து 29 ஆண்டுகள் கடந்திருப்பதை அவரது ரசிகர்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக தற்போது பேட்டியளித்துள்ள சந்திரசேகர்; விஜய்யை நாளைய தீர்ப்பு படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்தேன், அன்றே விஜய் மிகப்பெரிய உயரம் தொடுவார் என தெரியும். ரசிகன் திரைப்படம் மூலமாகவே விஜய் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டே உள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் விஜய் என்ற நிலை மாறி விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்ற பெருமையுடன் உள்ளேன். பெருமைமிக்க ஒரு தந்தையாக கருதுகிறேன் என்ற் குறிப்பிட்டார்.

மேலும்  விஜய்அந்த சமூகம் அக்கறை கொண்டவர். அதில் தொடர்ந்து அவர் பயணிக்க வேண்டும் என்ற எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பெயரில் சமூக சேவைகள் செய்து வருவதால் தான் உள்ளாட்சி தேர்தலில் அந்த வெற்றி கிடைத்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

click me!