நடிகர் லாரன்ஸ் மீது சமூகவலை தளங்களில் அவதூறு - கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
நடிகர் லாரன்ஸ் மீது சமூகவலை தளங்களில் அவதூறு - கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சுருக்கம்

rumors on lawrence in social media

நடிகர் லாரன்ஸின் நற்பணி மன்றம் மீது யூ.டி.யூப். இணையத்தில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் டூ சமூக ஆர்வலர்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் லாரன்ஸ்... திரைத்துறையில் பிஸியாக இருந்து வந்த லாரன்ஸ் அறம் செய விரும்பு திட்டம் மூலம் சமூக ஆர்வலராக உருவெடுத்தார். என்னை வாழ வைக்கும் தமிழ் மண்ணுக்கு 1 கோடி ரூபாயை நான் நன்கொடை யாகக் கொடுக்கிறேன்.

கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்காக போராடும் தகுதியானவர்களுக்கு இதை அளிக்க வேண்டும் என்று கூறி, 10 பேரை தேர்வு செய்தார். லாரன்ஸின் இந்த சமூகப்பணி இத்தோடு முடியவில்லை ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் தொடர்ந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு இருந்த தடையை நீக்கக் கோரி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்த்த இப்போராட்டத்திலும் லாரன்ஸ் கலந்து கொண்டு போராட்டக் காரர்களுக்கு உணவு தண்ணீர் என அனைத்தையும் தன் சொந்த செலவில் அளித்தார். போராட்டக்களத்தில்  தொடர்ந்து நான்கு நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு

ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழகமே போராட்டத்தில் குதித்தது. அதன்பின்னர் கடுமையான சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் போட்டி நடத்துவதற்கான தடை நீக்கப்பட்டது.

இதன்பின்னர் கிரீன்வேஸ் சாலையில் இருந்த பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்ற லாரன்ஸ் அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி பெற்றுத்தந்தவர்  ஓ.பன்னீர் செல்வம் என்றும் ஆதரவுக்கான விளக்கத்தை அளித்தார்.  

சமூகவலைத்தளத்தில் அவதூறு?

ஒரு புறம் நடிகர், மறுபுறம் சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மையாக தன்னை மாற்றிக் கொண்ட லாரன்ஸ் மீது சமூக வலைத்தலங்களில் பல்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக யூ.டி.யூப் எனப்படும் வீடியோ இணையத்தில் லாரன்சின் நற்பனி மண்றம் மீது அவதூறு பரப்பப்படும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆணையர் அலுவலகத்தில் புகார்

இதனை தொடர்ந்து கவனித்த வந்த அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர். அதில் சமூகநலன் விரும்பியாக செயல்படும் லாரன்ஸ் மீது அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு... ஆடிப்போன தளபதி
Songs: வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு, என்ன படம் தெரியுமா?