வசமாக சிக்கும் கவர்ச்சி கன்னிகள்...என்ன செய்தார்கள் தெரியுமா?

First Published Jul 23, 2018, 5:48 PM IST
Highlights
Rs 2000 crore fraud Actresses Sunny Leone Shilpa Shetty huma qureshi


ரூ.2000 கோடி பிட்காயின் மோசடி வழக்கில் நடிகைகள் சன்னி லியோன், ஷில்பா ஷெட்டி, ஹியூமா குரேசி உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் சிக்குகின்றனர்.
இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனைக்கு தடை உள்ளது. பிட்காயின்களை வாங்குவதும், விற்பதும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் அமித் பரத்வாஜ் பிட்காயின் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பிட்காயின்களை வாங்கினால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்று பிரபல நடிகைகள் விளம்பரம் செய்தனர்.

அமித் பரத்வாஜின் பிட்காயின் நிறுவன விளம்பரத்தில் நடிகைகள் சன்னி லியோன், பிராச்சி தேசாய், ஆர்த்தி சப்ரியா, சோனல் சவுஹான், கரிஷ்மா தன்னா, ஜரீன் கான், நேஹா தூபியா, ஹுயூமா குரேசி, நர்கிஷ் பக்ரி மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இதனை நம்பி சுமார் 8 ஆயிரம் பேர் இந்தியா முழுவதிலும் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். இந்த முதலீட்டு பணத்துடன் தொழில் அதிபர் அமித் பரத்வாஜ் மாயமானார். தொடர் புகார்களை தொடர்ந்து புனேவில் வைத்து அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பிட்காயின் மோசடி எப்படி நடைபெற்றது என்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது தான் பிரபல நடிகைகள் அமித் பரத்வாஜிடம் கோடி கோடியாக பணம் பெற்றுக் கொண்டு அவரது பிட்காயின் நிறுவனத்திற்காக விளம்பரம் செய்தது தெரியவந்தது.

பிரபல நடிகைகள் விளம்பரத்தில் நடித்த காரணத்தினால் தான் ஏராளமானவர்கள் அமித் பரத்வாஜ் நிறுவனத்தில் கோடி கோடியாக முதலீடு செய்தனர். இந்த உண்மை தெரிந்த நிலையில் விளம்பரங்களுக்கு ஏற்பாடு செய்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ராவை அமலாக்கத்துறை விசரித்தது.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விளம்பரத்தில் நடித்த சன்னி லியோன், ஹூயுமா குரேசி, ஷில்பா ஷெட்டி ஆகியோரையும் அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது. இவர்களில் ஹூயூமா குரேசி காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்துள்ளவர். மேலும் பல நடிகைகள் பிக் பாஸ் (The Big Boss) நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஆவர்.

click me!