RRR Trailer postponed RRR டிரெய்லர் இப்போது இல்லையா? ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்

Kanmani P   | Asianet News
Published : Dec 01, 2021, 08:18 AM IST
RRR Trailer postponed  RRR டிரெய்லர் இப்போது இல்லையா? ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்

சுருக்கம்

RRR Trailer postponed தொழில் நுட்ப கோளாறு காரணமாக படக்குழு திட்டமிட்டபடி "RRR" படத்தின் டிரெய்லர் வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு   “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாராகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து மோஷன் போஸ்டர், முதல் சிங்கிளாக "நட்பு" பாடல். இரண்டாம்  சிங்கிளாக "நாட்டுக்கூத்து" பாடல் வெளியாகியுள்ளது. இதில் சமீபத்தில் வெளியான நாட்டு கூத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இவர்களின் மின்னல் வேக நடனம் ரசிகர்களை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும் விதத்தில் அமைத்துள்ளது. தவிர அனைத்து மொழியிலும் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்த செய்தியை ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வந்தனர். 

இந்நிலையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மூவியின் ட்ரெயிலர் வெளியீடு தள்ளி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் 3 க்கு பதிலாக டிசம்பர் 10 அம தேதி ட்ரெயிலர் வெளியாகும் என் அத்தகவல் பரவி வருகிறது. இது குறித்தான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!