
தென்னிந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் என்ற அந்தஸ்திலிருந்து இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தை நோக்கி பாய்ந்துவரும் எஸ்.எஸ். ராஜமவுலியின் அடுத்த பட சாடிலைட் உரிமை, படத்தின் முதல் ஷெட்யூல் கூட முடிவடையாத நிலையில், 132 கோடிக்கு பேசி முடிக்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து 11 வெற்றிப்படங்களை இயக்கி உலக சாதனை புரிந்திருக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது 12 வது படமாக ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தத் தலைப்புகூட தற்காலிகமானதுதான் என்று கூறப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் ஹீரோக்களாக கமிட் பண்ணப்பட்ட இப்படத்தின் ஹீரோயின்கள் யார் என்பதுகூட இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படப்பிடிப்பின் முதல் ஷெட்யூல் மட்டுமே துவங்கியுள்ளது.
‘பாகுபலி 2’ வின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் தனது ஃபேவரிட் ஹீரோக்களை வைத்து ராஜமவுலி இயக்கிவரும் இப்படத்திற்கு பட அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. சுமார் 300 முதல் 350 கோடிக்குள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் சாடிலைட் உரிமையை தெலுங்கின் முன்னணி சானல் ஒன்று 132 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 600 கோடியில் உருவாக்கப்பட்ட ஷங்கர்-ரஜினி காம்பினேஷனின் ‘2.0’ இதில் பாதி விலைக்குக் கூட போகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.