பிரம்மாண்ட இயக்குநரை வைத்து 400 கோடியில் படமெடுக்கும் தயாரிப்பாளர்... கொரோனா நிதி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Apr 12, 2020, 12:30 PM IST
Highlights


அதுமட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலேயே பிசியான தயாரிப்பாளரான இவர் பசியால் வாடும் சினிமா தொழிலாளர்களுக்காக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். 

தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு என்று டோலிவுட்டில் தனியாக ஒரு சங்கம் உள்ளது.  அங்கு கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக களத்தில் இறங்கினார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி. கொரோனாவால் வேலை இழந்து வாடும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து நிதி வசூலிக்க தொடங்கினார். 


மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., பவன் கல்யாண் உள்ளிட்டோர் நிதியை வாரி வழங்கினர். சிரஞ்சீவி முன்னெடுத்த இந்த நல்ல காரியத்தால் அங்கு சில நாட்களிலேயே ரூ.6.2 கோடி வரை நிதி திரட்டப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு  ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோர் கோடிகளில் நிதி உதவி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹன்சிகா... ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... வைரலாகும் போட்டோ...!

தற்போது தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான ராஜமெளலி ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து “ஆர்ஆர்ஆர்” (ரத்தம் ரணம் ரெளத்திரம்) என்ற படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் படம் உருவாகிவருகிறது. 

இதையும் படிங்க: உடைமாற்ற இடமில்லாமல் தவித்த தமன்னா... ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கிடைத்த பகீர் அனுபவம்...!

அதுமட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலேயே பிசியான தயாரிப்பாளரான இவர் பசியால் வாடும் சினிமா தொழிலாளர்களுக்காக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கோடிகளில் வாரிக்கொடுத்து படம் எடுக்கும் தானய்யாவிற்கு, தொழிலாளர்களுக்கு உதவ மட்டும் மனமில்லாமல் போனது ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

click me!