பட்டையை கிளப்பும் புதிய போஸ்டருடன்... 'RRR ' படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு..!

Published : Jun 29, 2021, 06:22 PM IST
பட்டையை கிளப்பும் புதிய போஸ்டருடன்... 'RRR ' படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு..!

சுருக்கம்

இந்திய மக்களை ஆட்டி படைத்து வந்த கொரோனா இரண்டாவது அலை, சற்று கட்டுக்குள் வந்துள்ளதாலும், அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும் கிடப்பில் போடப்பட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் RRR படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதுகுறித்த சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.  

இந்திய மக்களை ஆட்டி படைத்து வந்த கொரோனா இரண்டாவது அலை, சற்று கட்டுக்குள் வந்துள்ளதாலும், அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும் கிடப்பில் போடப்பட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் RRR படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதுகுறித்த சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.

எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “RRR ” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில், விறுவிறுப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில்  தாறுமாறு வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் துவங்கியது. பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட போதிலும் சில காட்சிகளே படமாக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழு தகவல் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியுள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு, இரண்டு பாடல் காட்சிகளை தவிர அனைத்து பட காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே, விரைவில் 'RRR ' படத்தின் இந்த இரு பாடல் காட்சிகளும் படமாக்க பட்டு, ட்ரைலர் மற்றும் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லியோ பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜன நாயகன்.... முன்பதிவில் மாஸ் காட்டும் தளபதி...!
கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு