RRR movie day 3: பாகுபலி இயக்குனர், ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம், வெளியான மூன்றே நாளில் 480 கோடிகளை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது.
பாகுபலி இயக்குனர், ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மூன்றே நாளில் 480 கோடிகளை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது. ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் வெற்றியை தெலுங்கு திரையுலகமே கொண்டாடி வருகிறது.
undefined
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி, இவர் இயக்கத்தில் உருவான பாகுபலி, பாகுபலி2. மாவீரன் ஹிட் அடித்ததை தொடர்ந்து, இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். இவருடைய திரைப்படங்களில் பிரம்மாண்டத்திற்கு கொஞ்சமும், பஞ்சம் இருக்காது. அந்த அளவிற்கு பிரமாண்டத்திற்கு, கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
நட்சத்திர பட்டாளங்கள்:
ராஜமௌலி, இயக்கத்தில் தெலுங்கில் இரு பெரும் நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இதில், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நீண்ட நாள் காத்திருப்பிற்கு கிடைத்த பலன்:
கொரேனா காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மார்ச் 25 அன்று உலகம் முழுவதும் வெளியானது. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு, பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் பட்ஜெட்:
ரூ. 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் படம், ரிலீஸ் முன்பே சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் மூலம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில், ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்தது.
மூன்றாம் நாள் வசூல் விவரம்:
ஆர்.ஆர்.ஆர் படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் வசூல் வேட்டை சூடு பிடித்துள்ளது. அதன்படி, மூன்றாம் நாள் முடிவில் படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 32 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 480 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்முலம், படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 500 கோடியை, ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூன்றே நாளில் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.