
தன் பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாவிடம் ஆசி பெற்று 'வேட்டை நாய்'படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலாவை வைத்தே வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் .
இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் , இயக்குநர் பாலா மூலம் 'தாரை தப்பட்டை'யில் அறிமுகமான பின் வரிசையாகப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
வில்லனாக நடித்து வந்தவர் , இப்போது நாயகனாகி 'தனி முகம்' , 'பில்லா பாண்டி ' , 'வேட்டை நாய்' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் அவர் நடித்த 'வேட்டை நாய் ' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று இயக்குநர் பாலா வெளியிட்டிருக்கிறார். மேலும் இன்று ஆர்.கே.சுரேஷின் பிறந்த நாள் ஆகும்.
தன்னைச் சினிமாவுக்கு அறிமுகப் படுத்திய குருநாதரும் தன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணனுமாகிய பாலா ஆசியுடன் வெளியி டப்படுவது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது என மகிழ்கிறார் சுரேஷ். இந்த நாள் படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமையாகவும் அமைந்து இருப்பதில் ஆர்.கே.சுரேஷுக்கு கூடுதல் மகிழ்ச்சி.
இந்நிகழ்வில் இயக்குநர் ஜெய்சங்கர் , ஒளிப்பதிவாளர் எம்.முரளி, வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் தாய் மூவீஸ் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 'வேட்டை நாய் 'படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.