மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.கே. சுரேஷ்..!

 
Published : Jan 16, 2018, 03:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.கே. சுரேஷ்..!

சுருக்கம்

rk suresh felt in cheeting case

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என, படிப்படியாக திரைத்துறையில் கால் பதித்து தற்போது ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பவர் ஆர்.கே.சுரேஷ்.

இவர் படங்களில் நடித்து வந்தாலும், படங்கள்  தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கடந்த ஆண்டு இவர் தயாரிப்பில் வெளிவந்த 'தர்மதுரை' திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் மீது 'கோடைமழை' படத்தின் தயாரிப்பாளர் அலெக்சாண்டர் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி  புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், யாழ்  தமிழ்த் திரை சார்பாக, நண்பர்களுடன் இணைந்து 'கோடைமழை' என்கிற படத்தை தயாரித்தேன். திரைப்படத் துறை பற்றியும் அதன் வியாபாரம் பற்றியும் அதிகம் தெரியாததால், படத்தை வெறும் 27 திரையரங்கத்தில் மட்டுமே வெளியிட முடிந்தது.

இந்த நிலையில் எங்களுடைய படத்தை பார்த்த ஆர்.கே.சுரேஷ் படம் நன்றாக உள்ளது. படத்தை மறுவெளீயீடு செய்யலாம் என கூறி அதற்கு 40 லட்சம் வரை செலவாகும் என்றும், அப்படி கொடுத்தால் படத்தை 90 திரையரங்கத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

அதனை நம்பி முன்பணமாக அவரிடம் 25 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் சொன்னபடி 90 திரையரங்கங்களில் படத்தை வெளியிடாமல், வெறும் 11 திரையரங்கங்களில்  மட்டுமே வெளியிட்டார். மேலும் வரவு செலவு என எந்த கணக்கையும் காட்டாமல் , 11 லட்சம் காசோலையாக கொடுத்தார். அந்த காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டது எனக் கூறி ஆர்.கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் அலெக்சாண்டர் . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?