
தற்போது, பல படங்களில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார். மேலும் தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீப காலாமாக நடிப்பையும் தாண்டி, சமூக பணிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, முதல் ஆளாக சென்னை மக்களுக்காக ஒரு கோடி பணம் கொடுத்தார்.
இதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். எந்த வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் இவர் செய்து வரும் உதவியால் இவரை நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராக பலருக்கும் பிடிக்கும்.
கடந்த மாதம் கூட சென்னையில் நடந்த ஐபிஎல் விளையாட்டை தொகுத்து வழங்குவதை, காவிரிக்காக போராடும் விவசாயிகளின் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து தவிர்த்து விட்டார்.
இந்நிலையில் இவரை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் ஒரு போஸ்டர் வரையப்பட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜியின் முகம் வரையப்பட்டு, இளைஞர்களை வழி நடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களை வருக வருக என வரவேற்பதாக எழுப்பதப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.