தமிழ்ப்பட தயாரிப்பாளர்களை டெரரிஸ்டுகள் என்ற ஆர்.ஜே. பாலாஜி...

Published : Jan 31, 2019, 03:36 PM IST
தமிழ்ப்பட தயாரிப்பாளர்களை டெரரிஸ்டுகள் என்ற ஆர்.ஜே. பாலாஜி...

சுருக்கம்

‘இந்த நிகழ்ச்சிக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது தற்செயலாக தம்பி ஆர்.ஜே. பாலாஜி போனில் வந்தார். என்கூட இன்னொரு தயாரிப்பாளரும் இருக்காரு பேசுங்க என்று அவர் பெயரைச் சொல்லிக் கொடுக்கமுயன்றபோது, ‘ஓ ஒரே கார்ல ரெண்டு டெரரிஸ்ட்ஸ் டிராவல் பண்ணிக்கிட்டிருக்கீங்களா’ என்று கமெண்ட் அடித்தார் என்கிறார் அதிரடிப் பேச்சு மன்னன் தயாரிப்பாளர் கே.ராஜன்.

நேற்று நடந்த ‘மிக மிக அவசரம்’ ஆடியோ ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய அனைவருமே அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சியின் சர்ச்சையான பேச்சுகள், அறிக்கைகள் குறித்து தங்கள் அபிப்ராயங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக அவரை ஆதரித்துப்பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்,’’நானும் சுரேஷ் காமாட்சியும் காரில் வந்தபோது இந்த படத்தை வாழ்த்தி பேசிய ஆர்ஜே. பாலாஜியிடம் போனில் பேச நேர்ந்தது. அப்போது என்னுடன் சுரேஷ் காமாட்சி என்கிற கலகக்காரனும் இருக்கிறான் பேசு என கொடுத்தேன்.

 அவர்  போனை வாங்கி தம்பி சுரேஷ் காமாட்சியிடம் பேசுவதற்கு முன்பே என்னிடம் ‘என்னது ஒரே கார்ல ரெண்டு டெரரிஸ்டுகள் டிராவல் பண்றீங்களா? என்று கமெண்ட் அடுத்துவிட்டுத்தான் அவரிடம் பேசவே ஆரம்பித்தான். தமிழுக்கும், கலாச்சாரத்துக்கும் ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால்  எங்களுக்கு தீவிரவாதிகள் முத்திரை குத்திவிட்டான் தம்பி பாலாஜி. உண்மைதான்.. தமிழ் சினிமாவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், தமிழ் கலாச்சாரத்தை சிதைக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு நாங்கள் தீவிரவாதிகள்தான்” உணர்ச்சி பொங்க பேசினார் கே.ராஜன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!