ஹீரோ இவர் என்பதால் மீண்டும் தமிழில் நடிக்க ஓகே சொன்ன ஸ்ருதிஹாசன்!

Published : Jan 31, 2019, 03:28 PM ISTUpdated : Jan 31, 2019, 03:51 PM IST
ஹீரோ இவர் என்பதால் மீண்டும் தமிழில் நடிக்க ஓகே சொன்ன ஸ்ருதிஹாசன்!

சுருக்கம்

இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான, ' சிங்கம் 3 ' ஆம்  பாகத்தில் நடித்து முடித்தபின், ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. ஆனால் அவருடைய அப்பா கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இயக்கி நடித்து வந்த 'சபாஷ் நாயுடு' படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.   

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி சென்ற போதிலும் ஒரு சில காரணங்களுக்காக அதனை மறுத்து விட்டு, தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தை . 'இயற்கை, ஈ, பேராண்மை,  'புறம்போக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்குகிறார். 

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இவர் இயக்க உள்ள,  இந்த படத்தில், ஸ்ருதி நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் நடிக்க வந்த வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்து வந்த ஸ்ருதிஹாசன், இந்த படத்தில் நடிக்க காரணம்,விஜய் சேதுபதி  ஹீரோவாக நடிக்கிறார்  என்கிற ஒரே  காரணத்திற்காக தானாம். இதனால்  இயக்குனர் படம் குறித்து சொன்னதுமே நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவாரா? ஸ்ருதி பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!