அரக்கனாக மாறிய சுரேஷ்... அரசனாக மாறிய ரியோ...! புது டாஸ்கால் களைகட்டும் பிக்பாஸ் வீடு..!

Published : Oct 20, 2020, 11:14 AM IST
அரக்கனாக மாறிய சுரேஷ்... அரசனாக மாறிய ரியோ...! புது டாஸ்கால் களைகட்டும் பிக்பாஸ் வீடு..!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ரேகா வெளியேறியுள்ளார். எனவே இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள போட்டி போட்டு திறமையை வெளிக்காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ரேகா வெளியேறியுள்ளார். எனவே இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள போட்டி போட்டு திறமையை வெளிக்காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: ரவுடி பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை முல்லை..! லோக்கல் ரியாக்ஷனில் இறங்கி கொடுத்த போஸ்!
 

நேற்றைய தினம் எளிமையான டாஸ்க்கை வைத்த பிக்பாஸ் இன்று கொஞ்சம் கடுமையான டாஸ்க் தான் வைக்கிறார். அதாவது தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எட்டு பேர் ராஜா, ராணி, போன்ற கெட்டப்புகளும், மீதம் உள்ள எட்டு பேர், அரக்கர்கள் வேடமும் போட்டுள்ளனர்.

அரக்கர்கள் வேடம் போட்டுள்ளவர்கள் ராணி, ராணி, வேடம் போட்டவர்களை சிரிக்க வைக்க வந்தால், அவர்கள் சிலை போல் நிற்க வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். 

மேலும் செய்திகள்: ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்...! அத்து மீறும் இளசுகள்..! இணையத்தை தெறிக்கவிட்ட போட்டோஸ்..!
 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ரியோவுக்கு 23 ஆம் புலிகேசி புகைப்படம் வருகிறது. சுரேஷ் அரக்கர் வேடத்தில் கெத்து காட்டுகிறார். ரியோ தான் போடவுள்ள ராஜா வேடத்திற்காக மீசை தாடி அனைத்தையும் மழித்து விட்டதை பார்த்த சுரேஷ், அவரை ரொம்ப அழக இருக்க என புகழ்கிறார். 

நேற்றைய தினம் சாதாரண விஷயத்திற்காக சுரேஷிடம் முட்டி கொண்ட ரியோவை சுரேஷ் இப்படி கொஞ்சுவதை  பார்த்த பலர், உண்மையில் அவர் பெரிய மனுஷன் என நிரூபித்து விட்டார் என கமெண்டுகளை தட்டி விடுகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Divorce : சமந்தாவை போல் திருமணமாகி 4 வருஷத்தில் விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்