
சரியான விஷயத்தை, சரியான இடங்களில் சொன்னாலும்.. ஒருவருடைய தவற சுட்டி காட்டினாலும் எப்போது பிரச்சனை தான் என்பது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரியை உற்று நோக்கி வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
முதல் புரோமோவிலேயே தன்னை நாமினேட் செய்த ஆரி மீது கோவத்தை காட்டும் விதத்தில் பேசிய ரியோ, இரண்டாவது புரோமோவில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கேபியிடம், ஆரி பயமுறுத்துவதாக பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது புரோமோவில் ரியோ, ஆரி ப்ரோ ஒரு பயத்தை கொடுக்கின்றார். பயமுறுத்துகிறார். நீங்கள் என்னை இப்படி சொல்லிடீங்கள... இதற்கு மக்கள் உங்களை என்னதெரியுமா கேட்பாங்க என்று? எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் இடத்தில் நீங்கள் சேரவே இல்லை என்று நான் மிகவும் எளிமையாக கூறினேன்.
அதற்கு நான் நூறு சதவீத உழைத்திருக்கிறேன், உழைப்பை நீங்கள் கண்டுகொள்ளவில்லை, குழந்தை குடும்பம் என்று சொல்கிறார். ஆரியின் குழந்தையிடம் நான் ஆசையாக விளையாடி கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு மாதிரி வெறுப்பை உருவாக்குகிறார். இவர் பேசிய சில வார்த்தைகளால் எனக்கு அதிகமாக கோபம் தான் வருகிறது என்று ரியோ புலம்பி தள்ளுகிறார்.
அந்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.